வீட்டுக்கு பின்னால் தோண்ட தோண்ட கட்டு கட்டாக கிடைத்த பணம்

x

திருட்டு வழக்கு - புதைக்கப்பட்ட நிலையில் ரூ.39லட்சம் மீட்பு

கோழிக்கோடு அருகே நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், மண்ணில் புதைக்கப்பட்ட 39 லட்ச ரூபாய் ரொக்க பணம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே தனியார் வங்கி ஊழியர் அரவிந்திடம் இருந்து

ஷிபின் லால் என்பவர் பணம் அடங்கிய பையைப் பறித்துச் சென்றுள்ளார். அடகு வைக்கப்பட்ட தங்கத்தை வங்கிக்கு மாற்றலாம் என்றும் இதற்கு 40 லட்ச ரூபாய் தேவை என்றும் பொய்கூறி தனியார் வங்கி ஊழியர்களை தவறாக வழிநடத்தி ஷிபின் லால் பணம் பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஷிபின் லாலை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 50,000 ரூபாயை மட்டுமே மீட்டனர். இருப்பினும், துருவி துருவி நடத்திய விசாரணையில், ஷிபின் லாலின் வீட்டில் பிளாஸ்டிக் பையில் புதைக்கப்பட்டிருந்த 39 லட்ச ரூபாயை போலீசார் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்