ரூ.10 க்கு ஆசைப்பட்டு ரூ.1.30 லட்சத்தை இழந்த முதியவர்

பெங்களூருவில் சாலையில் கிடக்கும் சில்லறை ரூபாய்க்கு ஆசைப்பட்டு, முதியவர் ஒருவர் ஒன்றரை லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
ரூ.10 க்கு ஆசைப்பட்டு ரூ.1.30 லட்சத்தை இழந்த முதியவர்
Published on

பெங்களூருவில் சாலையில் கிடக்கும் சில்லறை ரூபாய்க்கு ஆசைப்பட்டு, முதியவர் ஒருவர் ஒன்றரை லட்ச ரூபாயை இழந்துள்ளார். குண்டப்பா என்ற முதியவர், வங்கியில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு, காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சில இளைஞர்கள், காரில் இருந்து பத்து ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்ததாக தெரிவித்தனர். இதனால் காரை விட்டு, குண்டப்பா, இறங்கியதும், இன்னொரு இளைஞர் கார் கதவு வழியாக பண பையை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com