

உத்தரபிரதேசம் மாநிலம், மகோபாவில், ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில், சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றது.பிரசவ வலியால் துடித்த அவர் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, துணிகளை கைகளால் பிடித்து மறைப்பு ஏற்படுத்தி, பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது.