Assam Youth Stunt | பற்றி எரிந்ததால் வெளியே குதித்து தப்பிய இளைஞர்கள்
பற்றி எரிந்ததால் வெளியே குதித்து தப்பிய இளைஞர்கள்
அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில், ஓடும் காருக்குள் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த 3 இளைஞர்களுக்கு விபரீத முடிவு நேர்ந்துள்ளது. இவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில், வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. நூலிழையில் காரில் இருந்து குதித்து இளைஞர்கள் உயிர் தப்பிய நிலையில், அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இளைஞர்களை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
