Andaman Nicobar | Rahul Gandhi | நிக்கோபாரில் நின்று.. ராகுல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

நிக்கோபாரில் நின்று.. ராகுல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Andaman Nicobar | Rahul Gandhi | நிக்கோபாரில் நின்று.. ராகுல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

நிக்கோபார் தீவுக்கு நேரில் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 92 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரேட் நிக்கோபார் மேம்பாட்டு திட்டம் மிகப்பெரிய மோசடி என்று குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த திட்டம், இயற்கை மற்றும் பழங்குடியின பாரம்பரியத்திற்கு எதிரான கடுமையான குற்றம் என்று தெரிவித்துள்ளார். அங்கு பல லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும், 160 சதுர கிலோ மீட்டர் மழைக்காடுகள் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், ஆனால் மக்கள் நினைத்தால் இதனை தடுக்க முடியும் எனவும் பதிவிட்டுள்ளார். 2021ம் ஆண்டு மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், நிக்கோபார் தீவில் சர்வதேச துறைமுகம், விமான நிலையம், நகரமைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

X

Thanthi TV
www.thanthitv.com