

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் தொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் மாதத்திற்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? அமையும் என்பது பற்றி பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், மத்திய குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் சஞ்சய்ராய் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது என்பது குறித்து, தேர்வு குழு வரும் 18ம் தேதி கூடி முடிவெடுக்க உள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட 3 மாத கால அவகாசம் தேவைப்படுவதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது..