ஓசூர் அருகே பூச்சி மருந்து குடித்து வடமாநில குடும்பத்தினர் தற்கொலை முயற்சி - சிறுவன் பலி
ஓசூர் அருகே பூச்சி மருந்து குடித்து வடமாநில குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகலூர் அடுத்த பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தனது 3 குழந்தைகளுடன் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் யாரும் அறையை விட்டு வெளியே வராததால், தோட்ட பராமரிப்பாளரான நாகராஜ் என்பவர் சென்று பார்த்த போது அனைவரும் விஷம் குடித்து மயங்கி நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக அனைவரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
