சபரிமலைக்கு செல்ல 2 பெண்கள் முயற்சி : தடுத்து நிறுத்தி பக்தர்கள் முழக்கம்

பக்தர்களின் எதிர்ப்பால், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற இரண்டு பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சபரிமலைக்கு செல்ல 2 பெண்கள் முயற்சி : தடுத்து நிறுத்தி பக்தர்கள் முழக்கம்
Published on

கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் மற்றும் சாமிலா சஜீஷ் ஆகிய இருவரும், ஆறு ஆண்களுடன் சபரிமலை செல்ல முற்பட்டனர். பம்பையில் இருந்து வந்து கொண்டிருந்த அவர்களை, நீலிமலைப் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பெண்கள் வரும் தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள், பெண்களை சூழ்ந்துள்ளனர். கேரள மாநில உதவி காவல் ஆணையர் பிரதீப் குமார், இரண்டு பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரண்டு பெண்களும், போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com