பேச மறுத்த காதலி - தூக்கில் தொங்கிய இளைஞர்

x

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதலியின் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட இளைஞர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காவுவிளைகாலனி பகுதியை சேர்ந்தவர் தனுஷ். கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலியை பார்க்க குலசேகரம் சென்ற தனுஷ், அவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் காதலி பேசாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், நீதிமன்றத்தை நாட போவதாகவும் தனுஷின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்