ஈவ் டீசிங் தொல்லை - மாணவி விஷம் குடித்து தற்கொலை
ஈவ் டீசிங் தொல்லை - மாணவி விஷம் குடித்து தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில், 17 வயது சிறுவனால் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
அந்த மாணவி டியூஷன் முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த சிறுவன், மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதுடன் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டுக்குச் சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். மேலும், தற்கொலை செய்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், நாரங்பூரைச் சேர்ந்த அந்த சிறுவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Next Story
