"சாணமே செல்வம்" - ஃபாரின் வேலையை விட்டு, மாடு மேய்க்கும் இன்ஜினீயர் - சொல்லும் சூப்பர் காரணம்..!

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே பொறியாளர் வேலையை துறந்துவிட்டு, தற்சார்பு வாழ்வியலை முன்னெடுத்து இருக்கிறார் இளைஞர் ஒருவர்... இயற்கையுடன் இணைந்த அவரது அழகிய வாழ்வியலை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
x

மலையடிவாரத்தில் மண் வீடு, வீட்டைச் சுற்றி மேயும் நாட்டு மாடு, கோழி, வாத்து சகிதம் பாரம்பரிய விவசாயியைப்போல் வாழ்க்கையை நடத்தி வரும் இந்த இளைஞர் அடிப்படையில் ஒரு பொறியாளர்....வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் அளித்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, சொந்த கிராமத்தில் தற்சார்பு வாழ்வியலை முன்னெடுத்து இருக்கிறார் இந்த இளம் விவசாயி...நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ்... திருமணமாகி குழந்தை உள்ளது...மெக்கானிக்கல் இன்ஜினியராக அரபு நாடுகளில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது அக்மார்க் விவசாயியாக மாறி இருக்கிறார்.வெறும் பணமெனும் ஒற்றை காரணத்துக்காக, உறவுகளை தொலைத்து, எங்கோ ஒரு தேசத்தில் பரிதவிக்க விரும்பாமல், உள்ளூரிலேயே தான் விரும்பிய படி வாழ்ந்து வருவதாக கூறுகிறார் ஓம் பிரகாஷ்....

Next Story

மேலும் செய்திகள்