ஜாலியாக ரேம்ப்வாக் செய்யும் வடிவேலு, பிரபுதேவா
நடிகர் வடிவேலுவும், பிரபுதேவாவும் துபாயில் ஜாலியாக rampwalk செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காதலன், மனதை திருடி விட்டாய், எங்கள் அண்ணா ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் இன்றும் நம் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இணையாமல் இருந்த இவர்கள், சரியான கதை அமைந்தால் மீண்டும் இணைவோம் என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில், இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபு தேவா, வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்துள்ள்ளனர். இப்படத்தின் பூஜை துபாயில் நடைபெற்றுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் வடிவேலும்வு நடிகர் பிரபுதேவாவும் ஜாலியாக rampwalk செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
