கைதி திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் கைதி படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மகேஷ் பாபு, படத்தை புதிய முறையில் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் திரைக்கதை, சண்டை காட்சிகள் மற்றும் நடிப்பு அருமையாக உள்ளதாகவும், பாடல்களே இல்லாத படத்தை எடுத்து ஒரு நல்ல மாற்றத்தை படக்குழு கொடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்