"ரசிகர்களை சிம்பு தவறாக வழிநடத்துகிறார்" - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார்

"அண்டா கணக்கில் பாலாபிஷேகம் செய்ய சொல்வதா?"
"ரசிகர்களை சிம்பு தவறாக வழிநடத்துகிறார்" - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார்
Published on
தமது திரைப்பட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யச் சொல்லும் நடிகர் சிலம்பரசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பால் முகவர்கள் சங்கம், சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளது. அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சிம்பு அண்டா கணக்கில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பால் முகவர்கள் சங்கத்தினர் புகாரில் அளித்துள்ளனர். ரசிகர்களை சிம்பு தவறாக வழிநடத்துவதாகவும், பால் கேன்கள் காணாமல் போக வாய்ப்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரசிகர்களை சிம்பு உசுப்பேற்றுவதன் மூலம், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com