"STR - 50" தயாரிப்பாளராக களமிறங்கும் நடிகர் சிம்பு! | Silambarasan TR
நடிகர் சிம்பு, தனது 50வது படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்குவதாக அறிவித்துள்ளார். தனது பிறந்தநாளில் 50வது படம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சிம்பு, இந்த படம் பாகுபாலி மாதிரியானது அல்ல, தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும் என உறுதி அளித்துள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் எஸ்டிஆரின் 50வது படம் மிகப்பெரிய பட்ஜெட்டில், வரலாற்று கதைகளத்துடன் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story