அல்லு அர்ஜுன் – லோகேஷ் படத்தில் பூஜா ஹெக்டே, ருக்மிணி வசந்த்?
அல்லு அர்ஜுன் – லோகேஷ் படத்தில் பூஜா ஹெக்டே, ருக்மிணி வசந்த்?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இணையும் படத்தில், இரண்டு முன்னனி கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அல்லு அர்ஜுனின் 23வது திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே "அலா வைகுந்த புரமுலோ"’ படத்தில், அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்து இருந்த பூஜா ஹெக்டே, மீண்டும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், காந்தாரா சாப்டர் 1 படம் மூலம் கவனம் பெற்ற ருக்மிணி வசந்தும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
