தனுஷின் 56வது படத்தை இயக்கும் "லப்பர் பந்து" இயக்குனர்

நடிகர் தனுஷின் 56வது படத்தை லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷின் 56வது படத்தை லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்த படத்திற்கான தயாரிப்பு பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால் படம் தள்ளி போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது..

இதனால் ஏற்கனவே தனுஷின் அடுத்த படத்தை இயக்க காத்திருந்த தமிழரசன் பச்சமுத்து, தனுஷின் 56 படத்தை இயக்கவுள்ளார். இதனை D56 என்ற ஹாஷ்டாக்குடன் கிளம்பியாச்சு என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com