கர்நாடகாவில் ரிலீஸாகிறது 'காலா' படம்

பலத்த எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி காலா திரைப்படம் நாளை கர்நாடகா மாநிலத்தில் வெளியாகிறது.
கர்நாடகாவில் ரிலீஸாகிறது 'காலா' படம்
Published on

'காலா' படத்தின் விநியோகஸ்தரும், 'சி' நிறுவன உரிமையாளருமான கனகபுரா சீனிவாஸ் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். சுமார் 130 திரையரங்குகளின் 'காலா' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அந்த திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க கர்நாடகா அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, கர்நாடகா ரக்ஷனா வேதிகா அமைப்பை சேர்ந்தவர்கள், 'காலா' பட வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா அரசைக் கண்டித்தும் காலா படத்திற்கு எதிராகவும் அவர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்

X

Thanthi TV
www.thanthitv.com