நடிகர் தனுஷ் நடிக்க இருந்த இளையராஜா பயோ பிக் ட்ராப்? இளையராஜா பயோபிக் உருவாவதில் சிக்கல் ?

x

சூரரைப் போற்று, 800, அமரன், உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற, அடுத்தடுத்த பயோபிக் படங்களும் அணிவகுக்கத் தொடங்கின...

அந்த வகையில், இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்க ஆயத்தமானது தமிழ்த்திரைத்துறை...

80ஸ் முதல் 2கேஸ் வரை அனைத்து தலைமுறையையும் தனது இசையால் கட்டிப்போட்டு ஆள்கிறார் இளையராஜா..

தமிழ்த்திரைத்துறைக்கு மணிமகுடமாய் விளங்கும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், படத்தின் திரைக்கதை அமைக்கும் பொறுப்பை கமல்ஹாசன் ஏற்றிருந்தார்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்த சூழலில், இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியது...

இத்திரைப்படத்தில் இளையராஜாவின் இசையை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருந்த சூழலில், குபேரா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தனுஷ் படத்தில் இணைவதாக தகவல் வெளியானது...

ஆனால், திடீரென படத்தின் திரைக்கதை அமைக்கும் பொறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகினார் கமல்ஹாசன்.

அதே வேளையில், குபேரா படத்தில் நடித்து முடித்த தனுஷ், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருவதோடு, இயக்குநராகவும் பிசியாகியுள்ளது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்பின்னர் அந்த படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது படத்தை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை..


Next Story

மேலும் செய்திகள்