Divya Sathyaraj| திருமணம் குறித்த மகளின் கருத்தால் வெடித்த சர்ச்சை.. உள்ளே புகுந்து சத்யராஜ் அதிரடி

திருமணம் குறித்த மகளின் கருத்தால் வெடித்த சர்ச்சை.. உள்ளே புகுந்து சத்யராஜ் அதிரடி

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணம் குறித்து தெரிவித்த கருத்து பேசு பொருளாகியுள்ள நிலையில், தனது மகளின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் ஒரு “பெரியாரிஸ்ட்" எனக் கூறிய அவர், ஜாதி, மதம், சடங்குகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றார். திருமணம் என்பது கட்டாயம் அல்ல, அது முழுவதும் தனிநபர் விருப்பம் சார்ந்தது எனவும் கூறினார். திருமணம் செய்யவோ, விவாகரத்து பெறவோ, அல்லது தனியாக வாழவோ அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும், அது அந்தந்த நபரின் விருப்பம் பொருத்தது என்றும் சத்யராஜ் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com