நண்பணுக்கு வந்த வரக்கூடாத நோய்.. கேட்டதும் துடிதுடித்து போய் காசை தூக்கி கொடுத்த தனுஷ் - அந்த நடிகரா இது?
கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் 'துள்ளுவதோ இளமை' பட நடிகர் அபிநய்-வின் மருத்துவச் செலவிற்காக நடிகர் தனுஷ் 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தவர் தான் அபிநய். பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு டப்பிங்கும் செய்திருக்கிறார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போக, அவர் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. கல்லீரல் பாதிப்பால் ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறிப்போயிருந்தார். இந்நிலையில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக காத்திருக்கும் அபிநய்-க்கு தனுஷ் உதவிசெய்துள்ளார்.
Next Story
