

நடிகர் தனுஷ் ஏற்கனவே 3க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் இப்படங்களை தொடர்ந்து கோமாளி பட இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ், காமெடி படத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதன் காரணமாகவே ப்ரதீப் ரங்கநாதனை தொடர்பு கொண்டு கதை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.