Bigboss | Kannada | `பிக்பாஸ்’ செட்டை இழுத்து மூட உத்தரவு - ஆரம்பித்த ஓரிரு வாரத்திலே பேரதிர்ச்சி

x

கன்னட "பிக் பாஸ்" செட்டை இழுத்து மூட உத்தரவு

கன்னட 'பிக்பாஸ்' செட்டை மூட வேண்டும் என, அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னட பிக்பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி, 19 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ளது. வழக்கம்போல நடிகர் கிச்சா சுதீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனிடையே, இந்த பிக் பாஸ் செட்டில் கழிவுநீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. வளாகத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழல் விதிமுறைகளை தயாரிப்புக் குழு கடைபிடிக்கும் வரை, கன்னட பிக் பாஸ் தளத்தின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைக்க, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்