'கடாரம் கொண்டான்' படத்தில், நடிகர் விக்ரம் பாடல் பாடியுள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தில், விக்ரமுடன், அக்சரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். இதில், ஜிப்ரான் இசையமைக்கும், "தீச்சுடர் குனியுமா?' என்ற பாடலை விக்ரம் பாடியுள்ளார்.