

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் குறித்த காலத்தில் பட தயாரிப்பு பணிகள் தொடங்கப்படவில்லை என சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுதொடர்பாக எந்த ஆதாரங்களும் சிம்பு தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை என கூறிய நீதிபதி, முன்பணமாக பெற்ற 50 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து 85 புள்ளி 50 லட்ச ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என நடிகர் சிம்பு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இல்லையென்றால் சிம்புவுக்கு சொந்தமான வீட்டு உபயோகப் பொருட்கள் ஜப்தி செய்ய நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.