Actor Sathish | CM Vijay | CM விஜய் குறித்து மேடையிலேயே சொன்ன நடிகர் சதீஷ்

CM விஜய் குறித்து மேடையிலேயே சொன்ன நடிகர் சதீஷ்

Actor Sathish | CM Vijay | CM விஜய் குறித்து மேடையிலேயே சொன்ன நடிகர் சதீஷ்

முழுக்க சட்டமன்றத்தையே பார்க்கிறோம் - நடிகர் சதீஷின் சுவாரசியமான பேச்சு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சதீஷ், முதல்வர் விஜய் மற்றும் அவரது அரசியல் பயணம் குறித்து சுவாரசியமாகப் பேசியுள்ளார். முன்பெல்லாம் பொழுதுபோக்குக்காக சினிமா பார்த்தோம், ஆனால் இப்போது முழுக்க சட்டமன்றத்தையே பார்க்கிறோம்" என்று குறிப்பிட்ட அவர், விஜய் அரசியலுக்கு வந்ததால் இனி சினிமாவில் பார்க்க முடியாது என தான் வருந்தியதாகவும், ஆனால் இப்போது 24 மணி நேரமும் அவரைக் காண முடிகிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், தான் பள்ளியில் படித்த காலத்தில் புத்தகத்திற்குள் விஜய்யின் படத்தை மறைத்து வைத்த போது, நடிகரின் படத்தை வைக்கக்கூடாது என திட்டினார்கள், ஆனால் இப்போது எல்லா தலைமையாசிரியர் அறையிலேயும் விஜய்யின் படம் மாட்டப்பட்டிருப்பதாகவும், கடின உழைப்புக்கும் வெற்றிக்கும் அடையாளம் விஜய் தான் எனவும் சதீஷ் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com