ஆல்பத்தில் கண்டெடுத்த அருமையான புகைப்படம் - குஷ்பூ நெகிழ்ச்சி
1992ல் வெளிவந்த பாண்டியன் திரைபடத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைபடம் ஒன்றை நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.
நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டா பக்கத்தில் ஊட்டியில் நடந்த பாண்டியன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், என் ஆல்பத்தில் கண்டெடுத்த அருமையான புகைப்படம் என பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.
புகைப்படத்தில், குஷ்பூ கேக்கை வெட்டிக்கொண்டிருப்பதோடு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் கைதட்டியபடி உற்சாகமாக உள்ளனர்.
பாண்டியன் திரைப்படத்தில் "அன்பே நீ என்ன அந்த கண்ணனோ" பாடல் படிப்பிடிப்பின்போது புகைபடம் எடுக்கப்பட்டதாக நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
Next Story
