T.Nagar Bus Accident | விடிந்ததும் பயங்கரம் - சென்னை தி.நகரில் விபத்தில் சிக்கிய பஸ்
சென்னை மேற்கு மாம்பலத்தில் மாநகர பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கியதில் பயணிகள் காயமடைந்தனர். சென்னை பெசன்ட் நகரில் இருந்து வடபழனி நோக்கி சென்ற 5E மாநகர பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 7 பெண் பயணிகள் காயமடைந்துள்ளனர். பெண் பயணி ஒருவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
