போக்குவரத்து நிறைந்த ரோட்டில் பட்டாசு வெடித்து சென்ற இளைஞர்கள்

x

கேரளாவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் பட்டாசு வெடித்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கேரள மாநிலம் எடப்பால் பகுதி மேம்பாலத்தின் கீழ் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள், வாகன போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில் இடையூறு விளைவிக்கும் வகையில் பட்டாசை கொளுத்தினர்.

இதில், வெடித்த பட்டாசின் சத்தத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் போலீசார் அந்த 2 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்