"என் பெயரையே கெடுத்துட்டாங்க" - கோபத்தில் பொங்கியெழுந்த தோனி | MS Dhoni | MSD | Chennai HC

x

"என் பெயரையே கெடுத்துட்டாங்க" - கோபத்தில் பொங்கியெழுந்த தோனி

ஐ.பி.எஸ்.அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் அறிக்கை அளித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் தனியார் தொலைக்காட் சி நடத்திய விவாத நிகழ்ச்சியில், தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தோனி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்