மகளிர் உரிமைத்தொகை திட்டம் - இன்று முதல்.. வெளியான அறிவிப்பு

x

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம், டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்குகிறது.

இதற்காக வீடுகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் விண்ணப்பம், டோக்கனை வழங்க வேண்டும் என நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பம் மற்றும் டோக்கனை வழங்குவதுடன், டோக்கன் மற்றம் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டவரிடம் பெற்றுக் கொண்டதற்கான ரசீது கையொப்பமிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். இது தவிர, நியாய விலைக்கடை பதிவேட்டிலும் பதிவு செய்து கையொப்பம் பெற்று வர வேண்டும் என நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின், முகாம் நடைபெறும் இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில் சென்று, விண்ணப்பம் மற்றும் வங்கி பாஸ்புக் விவரம் மற்றும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி விண்ணப்பத்தை பதிவு செய்து, ஆதார் சரி பார்ப்பையும் மேற்கொள்ள வேண்டும். ஆதார் சரிபார்ப்பின் போது கைரேகை சரியாக பதிவாகாத சூழலில், ஒருமுறை கடவுச்சொல் அல்லது பதிவேடு மூலமோ பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்