அடுத்த ஆண்டும் கொரோனா தொடருமா? - WHO வெளியிட்ட முக்கிய தகவல் | Corona Virus | WHO | Covid 19

x

கொரோனா தொற்று அடுத்த ஆண்டில் இருந்து உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 66 லட்சத்து 60 ஆயிரம் பேரை பலி கொண்ட கொரோனா வைரஸுக்கு இன்னும் சரவதேச சுகாதார அவசர நிலை தேவைப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சில மாதங்களுக்கு ஒருமுறை கூடுகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர், கடந்த வாரம் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவான நிலையில், வரும் 2023ம் ஆண்டு முதல் கொரோனாவுக்கு உலகளாவிய அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்