"ஏன் ஹிஜாப் போட்டுருக்கீங்க? யூனிபார்ம் எங்க..? - பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி

x

நாகையில், ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய விவகாரத்தில், பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்...திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜென்னட். இரவுப் பணியில் இருந்த இவரிடம், பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராம் என்பவர், மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும்? என்றும், மருத்துவர்களுக்கென தனியாக சீருடை கிடையாதா? எனவும் கேள்வி எழுப்பி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மருத்துவரை பணிச் செய்யவிடாமல் தடுத்தல், அனுமதியின்றி வீடியோ எடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக நிர்வாகியால் சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட சுப்ரமணியன் என்பவர், மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்