சென்னையில் எங்கே அதிகம் மழை பெய்தது?

x

சென்னையில் நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி, நேற்று காலை 08.30 மணியிலிருந்து இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில்11.2 சென்டி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 82 செ.மீட்டரும், நந்தனத்தில் 8.7 செ.மீ மழை பொழிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை 08.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக நெற்குன்றத்தில்13 சென்டி மீட்டரும், பெரம்பூரில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அயனாவரம், தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்