"50 வருசத்துக்கு பிறகு எங்களுக்கு கிடைச்ச பாக்கியம்" - போலீஸ் பாதுகாப்போடு நெகிழ்ச்சி சம்பவம்

x

கச்சிராயப்பாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில்‌, ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஒரு சமுதாயத்தினர் மட்டுமே வழிபட்டு வந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், கடந்த 50 ஆண்டுகளாக கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

கோயிலில் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில், அதிகாரிகள் சமாதானம் கூட்டம் நடத்தியதை அடுத்து, கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, முதன்முறையாக தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.

அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தவிர்க்க, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்