விராட் கோலியின் அசாத்திய சாதனை.. "டி20 போட்டிகளில் இவர்தான் முதல்.."

x

20 ஓவர் போட்டிகளில் ஒரே மைதானத்தில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தான் விளையாடிய 20 ஓவர் போட்டிகளில் மட்டும், 3 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் 20 ஓவர் போட்டிகளில் ஒரே மைதானத்தில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும், 20 ஓவர் போட்டிகளில் ஒரே மைதானத்தில் 3 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 300 ரன்களை கடந்த விராட் கோலி, தொடர்ந்து 14 ஐபிஎல் தொடர்களில் 300 ரன்களை குவித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்