விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளுடன், ஒருவர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x

எதேச்சையாக சோதனை செய்த போலீசார் - பையிலிருந்து அள்ள அள்ள வந்த பணம்.. வசமாக சிக்கிய நபர்

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளுடன், ஒருவர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் புதிய பேருந்து நிகண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அருண்குமார் என்பவரிடம் சோதனை செய்ததில், 11 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கான நோட்டுக்கட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னுக்குப் பின் முரணாக அவர் பதிலளித்த நிலையில், போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து வருமான வரித்துறையினரிடம் அருண்குமார் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் வைத்திருந்தது ஹவாலா பணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்