"வடிவேலுவுக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும்" - இயக்குனர் விக்னேஷ் சிவன்

வடிவேல் என்னும் மகா கலைஞனுக்கு தேசிய விருது அளிக்கப்பட வேண்டுமென, இயக்குனர் விக்கேஷ் சிவன் கூறியுள்ளார். மாமன்னன் திரைப்படத்தை பாராட்டியுள்ள விக்னேஷ் சிவன், வடிவேலு எனும் மகா கலைஞனின் திரை பயணத்துக்கான பரிசாக, மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும் என கூறியுள்ளார். வடிவேலு இந்த நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் எனவும் கூறியுள்ள விக்னேஷ் சிவன், இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் அளித்ததோடு, படைப்பு உருவாக பக்க பலமாக நின்றதில், உதயநிதி ஸ்டாலினின் நேர்மை வெளிப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com