யுனைடட் கோப்பை டென்னிஸ் தொடர் - நட்சத்திர வீரர் நடால் அதிர்ச்சி தோல்வி

x

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் யுனைடட் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், பிரிட்டன் வீரர் கேமரூன் நோரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 3க்கு 6, 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் நடாலை தோற்கடித்து, கேமரூன் நோரி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை நுரியாவும் தோல்வி அடைந்த நிலையில், 2க்கு பூஜ்யம் என்ற கேம் கணக்கில் பிரிட்டன் முன்னிலை பெற்று உள்ளது.

--


Next Story

மேலும் செய்திகள்