நைசாக ஸ்கூட்டியில் வந்து குழந்தையின் சைக்கிளை திருடி சென்ற இருவர் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

சென்னை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் குழந்தையின் சைக்கிளை திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனது சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளான். அதன் பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், சிறுவனின் சைக்கிளை தூக்கிச் சென்றனர். இச்சம்பவம் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இப்பகுதியில் அடிக்கடி வாகன திருட்டு நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்