தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: "17 பேர் மீது நடவடிக்கை?" ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வெளியான அருணா ஜெகதீசன் பரிந்துரையை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் வரவேற்றுள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 17-காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ள அருணா ஜெகதீசன் பரிந்துரையை வரவேற்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியாகி உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்