திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக எம்எல்ஏ.. மேற்கு வங்கத்தில் குறைந்த எண்ணிக்கை

x

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அலிபுர்துவார் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சுமன் கஞ்சிலால்.

இவர், கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி அலுவலகத்திற்கு சென்று, அக்கட்சியில் இணைந்தார்.

2021ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, இதுவரை 6 பாஜக எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

இதன்மூலம், மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 68ஆக குறைந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் விரைவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எம்எல்ஏ கட்சி தாவியிருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்