20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. 75 வயது முதியவர் அதிரடி கைது..!- மனதை பதறவைக்கும் பின்னணி..

x
  • திருவள்ளூர் அருகே காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திமுக பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.
  • திருப்பாச்சூர்கோட்டையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை, காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி, 75 வயது திமுக பிரதிநிதி கிருஷ்ணன், பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
  • இதற்கிடையே, கர்ப்பமான அந்த பெண்ணுக்கு 5 நாட்கள் முன்பு குறைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து இறந்தது.
  • இதையடுத்து, அந்த குழந்தையின் உடலை தனது வீட்டிலேயே யாருக்கும் தெரியாத வகையில் அந்தப் பெண் பள்ளம் தோண்டி புதைத்துள்ளார்.
  • இதுகுறித்த தகவலின்பேரில், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்ததுடன், திமுக பிரதிநிதி கிருஷ்ணனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்