திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..!

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் செலுத்தி பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் வைகுண்ட ஏகாதேசி நடைபெறுவதால் இன்று முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜனவரி இரண்டாம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் டிக்கெட்டுகள் வீதம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.


Next Story

மேலும் செய்திகள்