திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் திடீர் போராட்டம்

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக டோக்கன் இல்லாமல் காத்திருக்கும் பக்தர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கொட்டும் மழை மற்றும் குளிர் காற்றில், குழந்தைகள், மூத்த குடிமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.தங்களை விரைவாக கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டனர். ஆனால் கோரிக்கையை தேவஸ்தான நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாததால், அதிருப்தி அடைந்த பக்தர்கள், ஏழுமலையான் கோவில் பின்பகுதியில், தேவஸ்தான அருங்காட்சியகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்