அதிகாலையில் அடுத்தடுத்த கடையில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள் - திருச்சியில் பரபரப்பு

x

துறையூர் ஆலமரம் சந்திப்பில் அடுத்தடுத்து நகை கடைகள் வைத்திருப்பவர்கள் பாஸ்கர் மற்றும் பிரபு. இவர்களின் கடைகள் மர்மநபர்களால் அதிகாலையில் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரிடத்திலும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உரிமையாளர்கள் கடைக்குள் சென்று ஆய்வு செய்த போது, இரு கடைகளிலும் சேர்த்து மொத்தம் 10 கிலோ வெள்ளி மற்றும் 12 சவரன் நகைகளை மர்மநபர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இதே போல் அருகில் உள்ள சில கடைகள் மற்றும் கோவில் உண்டியல்களில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அருகில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்