திருச்செந்தூர் கோயில் பணியாளர்கள் திடீர் போராட்டம்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் கோயில் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் தொகையை வசூலிக்க முடியாத நிலை உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

அவர்களுடன் இணை ஆணையர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 41 பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்