டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு - அதிர்ச்சியில் ஃபாலோயர்ஸ்

x

கனடாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் பிரபலம் மேகா தாகூர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது ஃபாலோயர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் வசித்து வந்த மேகாவின் குடும்பம் கனடாவின் ஒன்டாரியோவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

டிக் டாக் செயலியில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் 21 வயதான மேகாவுக்கு பல லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்நிலையில், அவர் கடந்த நவம்பர் 24ம் தேதி உயிரிழந்து விட்டதாகக் குறிப்பிட்டு அவரது பெற்றோர் மேகாவின் வலை பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.

இதனைக் கண்டு கடும் அதிர்ச்சிக்கு ஆளான மேகாவின் ஃபாலோயர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில், மேகா கார் விபத்தில் உயிரிழந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்