சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை - வானிலை ஆய்வு மையம்

x

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

காலை 6 மணியளவில் கோயம்பேடு, மதுரவாயல், அமைந்தகரை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதால், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்