தம்பியை துடிக்க துடிக்க கொன்ற அண்ணன் ..விசாரணையில் வெளியான பகீர் உண்மை

x

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே கவரிங் தொழிலாளி மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், சொத்து தகராறில் அண்ணனே தம்பியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மாவுத்தம்பட்டி கிராமத்தில் கவரிங் பொருட்கள் விற்பனை செய்து வந்த சுந்தரேசன் என்பவர், அதே பகுதியில் உள்ள புளியந்தோப்பில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக, அமையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தியதில், திருமணமாகாத சுந்தரேசனை அவருடைய அண்ணன் முருகனே சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்தது தெரியவந்து. இதையடுத்து, முருகனை கைது செய்த போலீசார், நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்